Breaking News

புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் வைத்திலிங்கம் பிறந்த நாள். காரைக்காலில் இளைஞர்  காங்கிரஸ் சார்பில் கொண்டாட்டம்.

 



புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் வைத்திலிங்கம் பிறந்த நாளையொட்டி காரைக்கால் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் காரைக்கால் மையப்பகுதியில் உள்ள ஏழை மாரியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் மா.ரஞ்சித் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், மாவட்ட தலைவர் ஆர்.பி.சந்திரமோகன், மாநில துணைத்தலைவர் பஷீர், மாவட்ட மகிளாகாங்கிரஸ் தலைவி நிர்மலா, வட்டார தலைவர்கள் மாறன், சுப்பையன், முஜிப்ரஹ்மான், முரளி உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்காவில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று இனிப்புகள் வழங்கப்பட்டது.




No comments

Copying is disabled on this page!