Breaking News

புதுச்சேரியில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு கூடுதல் படுக்கை உள்ளிட்ட வசதிகளை அரசு செய்து தரவேண்டும் என அதிமுக வலியுறுத்தியுள்ளது.*

 



புதுச்சேரி அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநில செயலாளர் அன்பழகன், 

புதுச்சேரி அரசு மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் ஒரே படுக்கையில் மூன்று போ் படுக்கும் நிலையுள்ளது.இதனால் பல நோயாளிகள் தரையில் படுத்துள்ளனா். தற்போது டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் நோயாளிகளை ஒரே இடத்தில் படுக்க வைப்பது சரியல்ல. துணைநிலை ஆளுநா் இதில் தலையிட்டு நோயாளிகளுக்கு கூடுதல் படுக்கைகள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும்.


அரசு சாா்பு நிறுவன ஊழியா்களுக்கான ஊதிய நிலுவையை உடனே வழங்க வேண்டும். புதுச்சேரியில் திறந்தவெளி விளம்பரங்களை அரசு தடுக்காமலிருப்பது சரியல்ல என குறிப்பிட்டுள்ளாா்.

No comments

Copying is disabled on this page!