Breaking News

மயிலாடுதுறைக்கு வருகை தந்த அமைச்சர் கோவி.செழியனுக்கு பட்டாசு வெடித்து திமுகவினர் உற்சாக வரவேற்பு; அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் :-

 



தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றப்பின் முதல் முறையாக மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறைக்கு வருகை தந்த அமைச்சர் கோவி. செழியனுக்கு மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்எல்ஏ தலைமையில் திமுகவினர் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு அமைச்சர் கோவி.செழியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ‌அமைச்சர் கோவி. செழியனுக்கு திமுகவினர் பொண்ணாடை அணிவித்து மரியாதை செலுத்தி வாழ்த்து தெரிவித்தனர். இதில் எம்பி சுதா, காங்கிரஸ் எம்எல்ஏ ராஜகுமார், முன்னாள் எம்எல்ஏ க்கள், மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர செயலாளர்கள், நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

No comments

Copying is disabled on this page!