புதுச்சேரியில் தொடங்கிய தேசிய கர்லிங் சாம்பியன்ஷிப் போட்டியை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார்.*
இந்திய கர்லிங் கூட்டமைப்பு மற்றும் கர்லிங் புதுச்சேரி சார்பில் மூன்றாவது தேசிய கர்லிங் சாம்பியன்ஷிப் போட்டி புதுச்சேரி ராஜீவ் காந்தி உள் விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது. இரண்டு நாள் நடைபெறும் இந்த போட்டியில் அரியானா சிக்கிம், மணிப்பூர், அருணாச்சல பிரதேஷ், இமாச்சலப் பிரதேஷ், மத்திய பிரதேஷ், தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, உள்ளிட்ட 22 மாநிலங்களைச் சேர்ந்த 500 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். கர்லிங் ஃபெடரேஷன் சங்க பொது செயலாளர் வினோத், தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், தலைமை செயலாளர் சரத் சவுகான் கர்லிங் விளையாடி போட்டியை தொடங்கி வைத்தார்.
No comments