ஆரோவில் சர்வதேச நகரில் நவராத்தியையொட்டி நாட்டிய சக்கரா மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது..
புதுச்சேரி அடுத்த விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சர்வதேச நகரில் நவராத்தியையொட்டி, பாரத் நிவாஸில் பரதநாட்டிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
ஆரோவில் பவுண்டேசன் மற்றும் பாரத் நிவாஸ் ஆகியவை சார்பில் ‘சக்தி எனும் தலைப்பில் நடைபெற்ற பரத நிகழ்ச்சியில் நாட்டிய சக்கரா டெம்பிள் ஆஃப் டான்ஸ் இயக்குனர் குரு கலைமாமணி டாக்டர் கீர்த்திகா ரவிச்சந்திரன் குழுவினரின் பரதநாட்டியம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 20 மாணவிகள் கலந்து கொண்டு தங்களது நாட்டிய திறமைகளை வெளிப்படுத்தினர்.
தலைமை விருந்தினராக ஆரோவில் அறக்கட்டளையின் துணைச் செயலாளர் கே. ஸ்வர்ணாம்பிகா ஐ.பி.எஸ். நாட்டிய மாடியவர்களுக்கு பாராட்டுத் தெரிவித்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆரோவில் அறக்கட்டளையின் அறங்காவலர் ஜென்ம ஜெய் மொகந்தி செய்திருந்தார்...
இதில் ஆரோவில் வாசிகள், சுற்றுலா பயணிகள் மற்றும் பலர் பங்கேற்றனர் கண்டு களித்தனர்.
No comments