குலசை தசரா திருவிழாவில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு எஸ்.பி.ஆல்பர்ட் ஜான் சான்றிதழ் வழங்கி பாராட்டு.
குலசேகரப்பட்டினம் தசரா திருவிழாவின்போது சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் 69 பேருக்கு மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம், அருள்மிகு முத்தாரம்மன்கோவில் தசரா திருவிழா கடந்த 3 ஆம் தேதி தொடங்கி 13ம் தேதி வரை நடைபெற்றது. திருவிழாவின் போது எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல், கோவிலுக்கு வரும் பக்தர்கள் பாதிக்குள்ளாகாமல், அமைதியான முறையில் தசரா திருவிழா நடைபெற சிறப்பாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் உட்பட 69 பேருக்கு மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
- செ.அந்தோணி இன்பராஜ், தூத்துக்குடி மாவட்ட நிருபர்
No comments