தரங்கம்பாடி தாலுக்காவில் காப்பக குழந்தைகள் மற்றும் ஆதரவற்றோர் முதியோருக்கு புத்தாடை வழங்கிய தொண்டு நிறுவனம்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பொறையாரில் இயங்கி வரும் தி லைஃப் ஆஃப் சில்ட்ரன் தொண்டு நிறுவனம் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை ஒட்டி ஆதரவற்றோர் முதியோர் மாற்றுத்திறனாளிகள் மற்றும் காப்பக குழந்தைகளுக்கு புத்தாடை வழங்கி இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவிப்பது வழக்கம் இந்நிலையில் இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகையை ஒட்டி தரங்கம்பாடி பகுதியில் உள்ள கிருபாலயம் காப்பக குழந்தைகளுக்கு புத்தாடை மற்றும் இனிப்புகள் வழங்கி தி லைஃப் ஆஃப் சில்ட்ரன் தொண்டு நிறுவனம் அவர்களை உற்சாகப்படுத்தியது அதேபோன்று தரங்கம்பாடி பொறையார் மற்றும் பல்வேறு பகுதிகளில் சாலை ஓரங்களில் உள்ள ஆதரவற்றோர் முதியோர் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு நேரில் சென்று தொண்டு நிறுவனம் மூலம் புத்தாடைகள் வழங்கி இனிப்புகள் வழங்கி உற்சாகப்படுத்தினர்.
No comments