குடியாத்தம் அக்ரவாரம் கிராமத்தில் தமிழக வெற்றிக்கழக கிளை அலுவலகம் திறப்பு விழா.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த அக்ரவாரம் கிராமத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை கள்ளுர் மு. கலைச் செல்வம் தலைமையில் அலுவலகத்தைத் திறந்து வைத்து கொடியேற்றி இனிப்புகள் வழங்கியும் அன்னதானம் வழங்கியும் தமிழக வெற்றிக் கட்சியினர் ஒன்றிய நிர்வாகிகள் மு. நித்தியா எஸ். ராஜேஷ் ராமராஜ் வீரமணி அஸ்கர் தமிழரசன் மற்றும் கிளை கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
அப்போது கள்ளுர் மு.கலைச்செல்வம் கூறியதாவது நாங்கள் அனைவரும் 28 ஆண்டுகளாக விஜய் ரசிகர்களாக செயல்பட்டு வந்திருந்தோம் தற்போது எங்களுடைய தலைவர் விஜய் தமிழக வெற்றி கழக கட்சி ஆரம்பித்துள்ளார் தொடர்ந்து நாங்கள் கட்சியின் வளர்ச்சிக்காக இன்னும் நிறைய உறுப்பினர்களையும் சேர்த்து வருகின்ற தேர்தலில் தமிழகத்தில் நாங்கள் வெற்றி வாய்ப்பினை பெற்று தருவோம் எனவும் இதன்மூலம் தெரிவித்துக் கொள்கிறோம் எனக் கூறினார்கள்.
- வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ். விஜயகுமார்
No comments