பேரணாம்பட்டு மத்தூர் அருகே தொடர்ந்து ஏற்படும் சாலை விபத்துக்கள் நடவடிக்கை எடுக்குமா நெடுஞ்சாலை போக்குவரத்து துறை மக்கள் எதிர்பார்ப்பு.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே மத்தூர் என்னும் இடத்தில் அமைந்துள்ள சாலை தடுப்பு சுவர் மீது தொடர்ந்து விபத்துக்கள் ஏற்படுகின்றது இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கூறுகையில் இந்த விபத்துக்கள் ஏற்படுவதற்கான முக்கிய காரணம் இங்கு போதுமான மின் விளக்குகள் இல்லாததே காரணம் எனவும் இந்த இடத்தில் சாலையில் வேகத்தடை அமைக்கவும் மின் விளக்குகள் அமைத்து விபத்துகளை தடுக்கவும் கூறினார்கள்.
இப்பகுதியில் மட்டும் கடந்த 3 மாதங்களில் 50 க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்ததாகவும் இந்த விபத்துகள் அனைத்தும் இரவு நேரங்கள் மற்றும் அதிகாலை நேரங்களில் நடைபெறுவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனையுடன் கூறுகின்றனர். எனவே நெடுஞ்சாலை போக்குவரத்து துறை இதனைக் கருத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவும் இனி வரும் காலங்களில் உயிர் சேதங்கள் ஏதும் நடைபெறாமலும் தடுக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
- வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ். விஜயகுமார்
No comments