Breaking News

குடியாத்தம் புவனேஸ்வரி பேட்டை பெரியார் அரங்கத்தில் இலக்கிய அணி சார்பில் முப்பெரும் விழா.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் புவனேஸ்வரி பேட்டை பெரியார் அரங்கத்தில் இலக்கிய அணி சார்பில் முப்பெரும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது மாவட்ட நகர ஒன்றியம் திமுக இலக்கிய அணி பவள விழா அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கான தமிழ்நாடு அரசின் உதவித்தொகை அரசாணை பெற்ற கவிஞர் த. பாரி அவருக்கு பாராட்டு விழா ஆகியவை நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சி மாவட்ட இலக்கிய அணி தலைவர்  வி. ஏ. அன்பு தலைமையில் மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் பூமாலை வாசு வரவேற்புரையிலும் இவ்விழா நடைபெற்றது, பின்னர் குடியாத்தம் நகர செயலாளரும் நகர மன்ற தலைவருமான  எஸ். சௌந்தர்ராஜன் மற்றும் திராவிட கழக மாவட்ட காப்பாளர்  வி. சடகோபன் நகர முன்னாள் செயலாளர் எஸ். நடராஜன் கலந்துகொண்டு பாராட்டுச் சான்றிதழையும் வழங்கினார்.


பின்னர் இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர்  எஸ். பாண்டியன் வழக்கறிஞர் ஒன்றிய செயலாளர் அ. அன்பரசன் நகர அவைத் தலைவர்  க. கோ. நெடுஞ்செழியன் நகரத் துணைச் செயலாளர் ந. ஜம்புலிங்கம் மாவட்ட பிரதிநிதிகள் கோடீஸ்வரன் கே. தண்டபாணி மாவட்ட விவசாய அணி தலைவர்  ஏ. எஸ். அரி கிருஷ்ணன் மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் எஸ். பிரபு நகரமன்ற உறுப்பினர் டி. என். கோவிந்தராஜ் மற்றும் நகர ஒன்றிய இலக்கிய அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள் 

- வேலூர் மாவட்ட செய்தியாளர்  எஸ். விஜயகுமார் 

No comments

Copying is disabled on this page!