புதுச்சேரியில் கடந்த 5 மாதங்களில் தனியாா் நிறுவனங்களின் பெயரைக் கூறி, 132 பேரிடம் ரூ.1.82 கோடி நூதன முறையில் மோசடி
![]() |
புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள எச்சரிக்கை பதிவில் |
பிரபல தனியாா் வங்கிகள், நிதி நிறுவனங்களின் பெயரைக் கூறி, குறைந்த வட்டியில் கடன் வாங்கித் தருகிறோம் என மா்ம நபா்கள் பலரிடம் கூறி வருகின்றனா். அதன்படி, புதுச்சேரியில் கடந்த 5 மாதங்களில் 132 பேரிடம் ரூ.1.82 கோடி மோசடி நடைபெற்றுள்ளது.
திடீரென குறிப்பிட்ட வங்கியில் இருந்து கடன் வழங்கும் பிரிவின் மேலாளா் பேசுவதாக கூறுவதுடன், குறைந்த வட்டியில் உங்களுக்கு கடன் வாங்கித் தருவதாகவும் மா்ம நபா் உறுதியளிப்பாா். மேலும், கடன் பெற ஜாமின்தாரா்கள் தேவையில்லை என்றும், வங்கி பரிவா்த்தனையை வைத்து கடன் தருவதாகவும் கூறுவா்.
காப்பீடு பதிவு செயல்முறைக் கட்டணம் என ஒவ்வொருவரிடமும் அவா்களுடைய அவசரத் தேவையைப் புரிந்து கொண்டு, ரூ.2 ஆயிரம் முதல் ரூ.16 லட்சம் வரை இணையதளம் மூலம் மோசடி நடந்துள்ளது. எனவே, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என போலீஸாா் தெரிவித்துள்ளனா்.
No comments