கோவில்பட்டி அருகே பசுவந்தனை அருகே அம்மன் திருவுருவப் படத்திற்கு அணிவித்திருந்த நான்கு பவுன் தங்க நகை திருடியவர் கைது.
இது குறித்து கோவில் பூசாரி பழனி குமார் என்பவர் பசுவந்தனை காவல் நிலையத்தில் சென்று அங்கு புகார் மனு அளித்தார். புகாரின் அடிப்படையில் பசுவந்தனை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் பசுவந்தனை அருகே உள்ள அச்சங்குளம் பஸ் நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்தவரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர் கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த ஜெயகணேசன் என்பது தெரியவந்தது. முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் போலீசார் காவல் நிலையம் அடைந்து சென்று தங்கள் பாணியில் விசாரித்தனர். விசாரணையில் புங்கவர்நத்தம் காமாட்சி அம்மன் திருவுருவப்படத்தில் இருந்த தங்கநகை திருடியது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து நான்கு பவன் தங்க நகை மீட்டனர். நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
No comments