கோவில்பட்டி நடிகர் ரஜினிகாந்த் உடல் நலம் பெற வேண்டி - கோவில்பட்டியில் அங்க பிரதட்சணை செய்து வழிபாடு நடத்திய ரஜினி ரசிகர்கள்.
நடிகர் ரஜினிகாந்த் செப்டம்பர் 30-ம் தேதி கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது இதயத்திலிருந்து வெளியேறும் பிரதான ரத்தக் குழாயில் வீக்கம் ஏற்பட்டது. அறுவை சிகிச்சை இல்லாத டிரான்ஸ்கேட்டர் முறையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்த் பூரண உடல் நலம் பெற்று வர வேண்டி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள சொர்ணமலை கதிர்வேல் முருகன் திருக்கோவிலில் ரஜினி ரசிகர்கள் அங்க பிரதட்சணை செய்தனர். தொடர்ந்து சொர்ணமலை கதிர்வேல் முருகன் சிறப்பு பூஜைகள் செய்து, நடிகர் ரஜினிகாந்த் பேரில் அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினர்.
No comments