குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம். விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 12-ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு நடைபெறுகிறது.
கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா கோலாகலமாக தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு காலை 7 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் ஊர்வலமாக வந்தது. பின்னர் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதைத் தொடர்ந்து காலை 10.30 மணிக்கு கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்கார தீபாராதனைகள் நடந்தது.
தொடர்ந்து வெளி மாநிலங்களான மும்பை, வெளி மாவட்டங்களான சென்னை, கோவை, திருப்பூர், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இருந்து லட்சகணக்கான பக்தர்கள் வருகை தந்தனர். அவர்கள் கடற்கரையில் நீராடி கோவிலில் மாலை அணிவித்து காப்பு கட்டி தங்களது விரதத்தை தொடங்கினர். மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விரதம் இருக்கும் தசரா குழுவினருக்கும் மொத்தமாக காப்புகளை பெற்றுக்கொண்டனர்.
கொடியேற்றத்தை முன்னிட்டு பக்தர்கள் பாதுகாப்பு கருதி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விரதம் இருந்து காப்பு கட்டிய பக்தர்கள் நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து காணிக்கை வசூலித்து கோவிலில் செலுத்துவார்கள். 10 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதிஉலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றார். விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 10-ம் திருநாளான 12-ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு நடைபெறுகிறது. அன்றைய தினம் நள்ளிரவு லட்சகணக்கான பக்தர்கள் இந்த சூரசம்ஹாரத்தில் பங்கேற்பார்கள்.
- திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர் பெ.முகேஷ் செல் : 7339011001
No comments