தூத்துக்குடி புத்தகத் திருவிழா அரங்கில் புகைப்பட கண்காட்சியை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்.
தூத்துக்குடியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் 5வது புத்தக திருவிழா மற்றும் நெய்தல் கலைவிழா எட்டையபுரம் சாலையில் உள்ள சங்கரபேரி திடலில் நடைபெறுகிறது. அக்டோபர் 3ஆம் தேதி தொடங்கிய இந்த புத்தக திருவிழா 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மேலும் அக்டோபர் 11 முதல் 13 ஆம் தேதி வரை நெய்தல் கலைத் திருவிழா நடைபெறுகிறது.
இந்த புத்தக திருவிழாவில் ஒரூபகுதியாக புகைப்பட கண்காட்சி நடைபெறுகிறது. இதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் புகைப்பட கலைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு புகைப்பட கண்காட்சி போட்டி அறிவிக்கப்பட்டு, அதற்கென இணையதளம் தொடங்கப்பட்டது. இணையதளம் மூலம் போட்டியாளர்கள் கலந்து கொண்டு தங்களின் சிறந்த புகைப்படங்களை அனுப்பி வைத்தனர்.
அதனைத்தொடர்ந்து, புகைப்பட கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அனுப்பிய புகைப்படங்களில் சிறந்த புகைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு புத்தக திருவிழா அரங்கில் கண்காட்சி அமைக்கப்பட்டது. இந்நிலையில் புத்தக திருவிழா அரங்களில் அமைக்கப்பட்ட புகைப்பட கண்காட்சியினை, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், வருவாய் கோட்டாட்சியர் பிரபு, பபாசி செயலாளர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments