திமுகவின் கடந்த 3.5 ஆண்டுகள் ஆட்சியில் எதையும் செய்யவில்லை எனவும் பீக்ஹவர் கட்டணத்தினால் தொழில்கள் முடங்கியது மட்டுமின்றி வெளிமாநிலர்களுக்கு தொழில்கள் சென்று விட்டது என முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி குற்றச்சாட்டு.
எடப்பாடி அற்புதமான ஆட்சி நடத்தினார். கோவையின் வளர்ச்சிக்கு எடப்பாடி தான் காரணம். கேட்ட திட்டங்களை அனைத்தும் அள்ளி கொடுத்தவர் எடப்பாடி எனவும் ஆங்கிலேயர் ஆட்சியில் விதிக்கபடும் அளவிற்கு வரி விதிக்கப்பட்டு வருகிறது. பிக் ஹவர் கட்டணத்தினால் தொழில்கள் முடக்கம், வெளி மாநிலம், வெளி நாடுகளுக்கு சென்று விட்டது. கடந்த அதிமுக 10 ஆண்டுகாலம் ஆட்சியில் எந்த வரியும் உயர்த்தப்படவில்லை. திமுக ஆட்சியில் ஜோரக வசூல் நடக்கிறது. எந்த திட்டமும் நடக்கவில்லை.
சாலைகள் சீரமைப்பு இல்லை.கோவைக்கு இத்தனை பாலங்கள் வர காரணம் எடப்பாடி தான். அனைத்து பாலங்கள் எடப்பாடி பெயரை தான் சொல்லும்.எளிமையான முதல்வராக இருந்து பிரமாண்டமான திட்டங்களை கொடுத்தவர் எடப்பாடி. கோவை அரசு மருத்துவமனை அதிமுக ஆட்சியில் மேம்படுத்த பட்டது. விமான நிலையம் விரிவாக்கம் செய்தால் 1 இலட்சம் பேருக்கு வேலை கிடைத்திடும் ஆனால் இன்னும் திமுக செய்யவில்லை. ராகுல் காந்தி ?? மோடி?? என்று பார்த்து தான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் வாக்கு செலுத்தியதால் திமுக வெற்றி பெற்றது. ஆனால் சட்டமன்ற தேர்தல் வந்தால் அதிமுக தான் ஆட்சிக்கு வரும்.
இனி 1 வருஷம் தான் இந்த ஆட்சி, அடுத்து எப்ப தேர்தல் வந்தாலும் எடப்பாடி தான் முதல்வர். ரொம்ப கேவலமாக உள்ளது. எதையும் செய்யாமல் ஆட்சி நடத்தி வருகின்றனர். காவல்துறை கை கட்டப்பட்டுள்ளது. எங்கும் போதை பொருள் விற்கபடுகிறது. வருங்காலம் அழிந்து வருகிறது. சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்றார்.
No comments