தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழக முதல் மாநில மாநாடு பற்றி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் நடைபெற்றது நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொள்கைகள் மற்றும் கொள்கை அறிவிப்பு முதல் மாநில மாநாடு வருகிற 27-ந்தேதி விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை பகுதியில் நடக்கிறது. திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பில் மாநாட்டில் கலந்து கொள்வது குறித்த ஆலோசனை கூட்டம் திருச்செந்தூர் தனியார் மகாலில் நடந்தது. திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் விஜய் ஆனந்த் தலைமையிலும், ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் முன்னிலையில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநாட்டில் கலந்து கொள்ள தயாராகும் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் இருந்து கூட்டத்தில் எவ்வளவு பேர் ,எத்தனை வாகனங்களில் செல்வது என்றும், மாநாட்டுக்கு முன்னதாகவே செல்லவேண்டும் என்றும் ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
- திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர் பெ.முகேஷ் செல் : 7339011001
No comments