Breaking News

சேத்தியாத்தோப்பில் தமிழக அரசைக் கண்டித்து புவனகிரி எம்எல்ஏ அருண்மொழிதேவன் பங்கேற்ற மனித சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது.


கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் அதிமுக சார்பில் மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது. சேத்தியாத்தோப்பு நகரக் கழக செயலாளர் எஸ்.ஆர். மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் புவனகிரி மேற்கு ஒன்றியச் செயலாளரும், ஒன்றியப் பெருந்தலைவருமான சி.என். சிவப்பிரகாசம், கீரப்பாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.பி. கருப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும், புவனகிரி அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான அருண்மொழித்தேவன் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர் எல்லாவற்றிலும் தோல்வி அடைந்த அரசாக இந்த தமிழக அரசு இருந்து வருகிறது. மேலும் தற்போது விமான சாகச நிகழ்ச்சியில் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் சொகுசாக வசதி செய்து கொண்ட முதல்வர் பொதுமக்களுக்கு அதை செய்யத் தவறிவிட்டார்  என்று குற்றம் சாட்டிப் பேசினார்.

மேலும் புவனகிரி ஊராட்சி ஒன்றிய பழைய அலுவலக கட்டிடம் இடிப்பு விவகாரத்தில்திமுக மாவட்ட நிர்வாகமும், துறை சார்ந்த அதிகாரிகளும், ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு வைத்தும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் பேசினார். தமிழக அரசுக்கு எதிராக முடிவில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் புவனகிரி மேற்கு ஒன்றியச் செயலாளர் சி என் சிவப்பிரகாசம் மேற்கு ஒன்றிய செயலாளர் கருப்பன்  மற்றும்  அதிமுக நிர்வாகி அண்ணா பிரபாகரன் மற்றும் கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் எனப் பலர் பங்கேற்றனர்.

No comments

Copying is disabled on this page!