புதுச்சேரியில் சுமார் 2 மணி நேரம் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
புதுச்சேரி பருவமழை தொடங்க இன்னும் சில நாட்களை உள்ள நிலையில் இன்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மேலும் சுமார் 10 மணி அளவில் நகரம் மற்றும் கிராமப்புறங்களில் ஆரம்பித்த மழை கனமழையாக மாறியது. இதனால் அலுவலகங்களுக்கு செல்பவர்கள்,வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மேலும் புதுச்சேரியில் உள்ள தாழ்வான பகுதிகள் மற்றும் குடியிருப்புகளில் மழை நீர் புகுந்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
இதனிடைய நாளை ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், நெல்லித்தோப்பு,சாரம்,உழவர்சந்தை,பெரிய மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் வியாபாரம் பாதிக்கப்பட்டது.
மேலும், புதுச்சேரி கடற்கரை அருகே உள்ள அரசு பொது மருத்துவமனையில் மழைநீர் புகுந்ததால் நோயாளிகள், ஊழியர்கள் அவதியுற்றனர்.
No comments