Breaking News

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயில் அதிமுக பேரூராட்சி செயளாலரை தாக்கிய திமுக பேரூராட்சி மன்ற தலைவரின் கணவர்,துணை தலைவர் மற்றும் திமுகவினர்.

 



மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோயில் அதிமுக பேரூராட்சி செயலாளராக போகர் ரவி உள்ளார் இவர் ஒப்பந்ததாரராகவும் செயல்பட்டு வருகிறார். நேற்று அதிமுக சார்பில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் பேரூராட்சி நிர்வாக சீர்கேடு மற்றும் முறைகேடுகள் குறித்து பேசியதாக கூறப்படும் நிலையில்.இன்று போகர் ரவி வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி செயல் அலுவலர் சந்தித்து 5 ஆண்டுகளுக்கு முன்பு செய்த ஒப்பந்த பணிக்கான தொகையை நிறுத்தி வைத்தது குறித்து செயல் அலுவலரிடம் கேட்க சென்ற நிலையில் அங்கு வந்த திமுக மாவட்ட பொருளாளரும் பேரூராட்சி மன்ற தலைவரின் கணவருமான அலெக்சாண்டர் அவரது சகோதரரும் துணைத் தலைவருமான அன்புச் செழியன் உள்ளிட்ட ஏழு பேர் போகர் ரவி தாக்கியதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தகவல் அறிந்த அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் அதிமுகவினர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது வைத்தீஸ்வரன் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Copying is disabled on this page!