சீர்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நிறைவு விழா..
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி சட்டநாதபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நிறைவு விழா நடைபெற்றது.
இந்நிறைவிழாவிற்கு பெஸ்ட் கல்வி நிறுவனங்களின் செயலாளர் எஸ். எஸ். என்.ராஜ் கமல் தலைமை தாங்கினார். சீர்காழி பசுமை சங்கத் தலைவர் பொறியாளர் சுப்பிரமணியன் தலைமையில் 150-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. மயிலாடுதுறை மாவட்ட என். எஸ். எஸ். தொடர்பு அலுவலர் முத்துக்குமாரசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் .மேலும் ஊராட்சி மன்ற தலைவர் தட்சிணாமூர்த்தி, துணைத் தலைவர் செந்தில்குமார், ரோட்டரி சங்க உறுப்பினர் ராஜேந்திரன், உதவி தலைமை ஆசிரியர் முரளிதரன், முருகவேல், ரோட்டரி சங்கர் முன்னாள் தலைவர் சத்ய நாராயணன், அப்துல் கலாம் நர்சிங் கல்லூரி தாளாளர் மதியழகன், ஓய்வு பெற்ற தமிழாசிரியர் வைத்தியநாதன் மற்றும் பொதுமக்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் நல்லாசிரியர் ராமலிங்கம் வரவேற்புரையாற்றினார். முகாம் ஏற்பாடுகளை திட்ட அலுவலர் சசிகுமார் ஏற்பாடு செய்தார்.
No comments