உளுந்தூர்பேட்டை அருகே உள்ள 110 திறன் கொண்ட துணை மின் நிலைய மின்வாரிய அலுவலகத்தில் இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சியில் உள்ள காயிதேமல்லித் தெருவை சேர்ந்தவர் செல்லப்பெருமாள் 54 சலவை தொழிலாளியான இவர் தனது வீட்டு சர்வீஸ்க்காக இருசக்கர வாகனத்தில் உளுந்தூர்பேட்டை தக்கா பகுதியில் உள்ள தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் 110 திறன் கொண்ட துணை மின் நிலைய அலுவலகத்திற்கு சென்றுள்ளார் வீட்டு சர்வீஸ் சம்பந்தமா அதிகாரிகளிடம் ஆலோசனை கேட்ட பிறகு வீட்டுக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தை எடுத்துள்ளார்.
அப்பொழுது திடீரென இரு சக்கர வாகனத்தில் இருந்து புகை வந்த சிறிது நேரத்திலே இரு சக்கர வாகனம் தீப்பிடிக்கதொடங்கி மல மலவென தீ கொழுந்து விட்டு எறிந்ததில் இருசக்கர வாகனம் முற்றிலும் எரிந்து சேதமடைந்துள்ளது பின்பு தகவல் அறிந்த தீயணைப்புத் துறை வீரர்கள் தண்ணீர் பீச்சடித்து அனைத்தனர் மேலும் மின்வாரிய அலுவலகத்தில் வாகனம் தீப்பற்றி எரிந்ததால் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க தீயணைப்பு வீரர்கள் அங்குள்ள மின்மாற்றின் மீது தண்ணீர் வேகமாக அடித்தனர் தொடர்ந்து விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
No comments