விளையாட்டு மைதானத்திற்காக இரு தரப்பினர் இடையே மோதல்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த எலவனாசூர் கோட்டையில் உள்ள நம்பி குளம் பகுதியில் இஸ்லாமியர்கள் உட்பட 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இந்த நிலையில் இஸ்லாமியரின் தர்கா அருகில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் இந்து மதத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அவ்வப்போது விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வந்தனர் தற்போது இஸ்லாமியர்கள் அங்கு விளையாட எதிர்ப்பு தெரிவித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் அதன் அடிப்படையில் நேற்று போலீசார் இந்து மதத்தைச் சேர்ந்த இளைஞர்களை அந்த இடத்தில் விளையாட கூடாது என்று கூறியதால் இரு மதத்தினர் இடையே பிரச்சனை ஏற்பட்டது இதன் காரணமாக இரு மதத்தினரும் அழைத்து உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் ஆனந்த கிருஷ்ணன் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது இதில் இரு மதத்தைச் சேர்ந்தவர்களும் தங்கள் கருத்துக்களை வைத்த நிலையில் உடன்பாடு எட்டப்படாததால் பத்து நாட்களுக்குப் பிறகு மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என வட்டாட்சியர் தெரிவித்தார்.இரு மதத்தினரையும் காவல்துறை அமைதியாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளது.
No comments