புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் புதிதாகப் பிறந்த பெண் குழந்தைக்கு முதலமைச்சரின் CM CARE திட்டம்
"புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் புதிதாகப் பிறந்த பெண் குழந்தைக்கு முதலமைச்சரின் CM CARE திட்டம் - 2023 இத்திட்டமானது புதியதாக பிறந்த பெண் குழந்தைக்கு ரூபாய்.50,000/- வைப்பு நிதியாக வங்கிக் கணக்கில் புதுச்சேரி அரசு CM CARE திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது.
அதில் முதல் கட்டமாக காரைக்கால் பகுதியை சேர்ந்த 31 பயனாளர்களுக்கு புதுச்சேரி குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் PRN_திருமுருகன் வழங்கினார்.
புதுச்சேரியில் உள்ள ஒரு தபால் அலுவலகம்/பட்டியலிடப்பட்ட வணிக வங்கியில் பெண் குழந்தையின் பெயரில் ₹ 50,000 டெபாசிட் செய்யப்படும், அதில் பெற்றோர்/பாதுகாவலர் ஒருவர் தனிப்பட்ட சேமிப்பு/நடப்புக் கணக்கு வைத்திருக்க வேண்டும்.
தகுதி, 17-03-2023 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்த பெண் குழந்தைகள் இந்தத் திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறத் தகுதியுடையவர்கள்.
இந்நிகழ்வில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் பொறுப்பு அதிகாரி காஞ்சனா உடனிருந்தார்.
No comments