Breaking News

பல கட்ட போராட்டத்திற்கு பிறகு மலைகிராமத்திலேயே புதிய பகுதி நேர நியாயவிலைக்கடையை திறந்து வைத்த ஆட்சியர்.


திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த  ஆலங்காயம் ஒன்றியத்தில் நெக்னாமலை என்னும் மலை கிராம ஊராட்சி அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1200 அடி உயரத்தில் உள்ள, இந்த மலை கிராமத்தில் 480 வாக்காளர்கள், 160 குடும்ப அட்டைதாரர்கள் என 700 க்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

மேலும் இந்த மலைகிராமத்தில், சுதந்திரம் அடைந்து இதுவரையில், மலைகிராம மக்களுக்கான முறையான சாலை வசதி இல்லாத நிலையில் ,நெக்னாமலை கிராம மக்கள் தங்களுக்கு வழங்கப்படும் ரேஷன் பொருட்களை 7 கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று கிரிசமுத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு நியாயவிலைக்கடையில்ரேஷன் பொருட்களை வாங்கி,   தலையின் மீது சுமந்து கரடு முரடான மலைச்சாலையில் நடந்து  செல்லும் நிலை உள்ளது.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நெக்னாலை மலை கிராமத்தில் தற்காலிகமாக மண் சாலை அமைக்கப்பட்ட நிலையில், அச்சாலையானது, மழை மற்றும் இயற்கை சீற்றத்தினால், முற்றிலும் சேதமடைந்தது, அதனை தொடர்ந்து மலைகிராம மக்களே ஒன்றிணைந்து அரசின் உதவியை நாடாமல், தங்களாகவே மண் சாலையை அமைத்தனர், அச்சாலையையும் இயற்கை சீற்றத்தினால், சேதமடைந்தது, அதனை தொடர்ந்து, மலைகிராம மக்களுக்காக புதிய பகுதி நேர நியாயவிலைக்கடையை இன்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தேவராஜ், நல்லதம்பி, செந்தில்குமார் ஆகியோர்  ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, மலை கிராம மக்களுக்கான முதல் ரேஷன் பொருட்கள் வினியோகத்தை துவக்கி வைத்தனர்,

மேலும் இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், மலைகிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

- பு.லோகேஷ் திருப்பத்தூர் மாவட்ட செய்தியாளர்.

No comments

Copying is disabled on this page!