வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு சின்ன பஜார் வீதியில் துருப்பிடித்து ஆபத்தான நிலையில் மின்கம்பம் மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்குமா ???
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு சின்ன பஜார் வீதியில் துருப்பிடித்து ஆபத்தான நிலையில் மின்கம்பம் சாய்ந்து கீழே விழும் தருவாயில் உள்ளது இந்த மின்கம்பத்தை தினமும் 300 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகள் கடந்து செல்கிறார்கள், இந்த மின் கம்பமானது சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேல் உள்ளது இந்த மின்கம்பத்தின் அருகே அபாயத்தை உணராமல் சிறுவர்கள் விடுமுறை நாட்களில் கிரிக்கெட் விளையாடுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
மேலும் மழைக் காலங்களில் அந்தக் கம்பத்தின் மீது மின்சாரக் கசிவு ஏற்படுவதாகவும் மக்கள் கூறுகின்றனர் எனவே மின்சாரத்துறை அதிகாரிகள் உடனடியாக இதனை பார்வையிட்டு அதனை அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
- வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ். விஜயகுமார்
No comments