ஆர்எஸ்எஸ் இயக்க நூற்றாண்டு துவக்க விழா மற்றும் விஜயதசமி முன்னிட்டு அணிவகுப்பு ஊர்வலம், பொதுக்கூட்டம் திருச்செந்தூரில் நடந்தது.
திருச்செந்தூர் மையிலப்புரம் தெருவில் துவங்கிய ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் ஓய்வு பெற்ற ஐஜி மாசானமுத்து தலைமை வகித்தார். இந்த ஊர்வலம் உள்மாட வீதி, பந்தல் மண்டபம், சன்னதி தெரு, பள்ளத்தெரு, சபாபதிபுரம் தெரு, புளியடித்தெரு, தாலுகா ஆபீஸ் ரோடு, நாடார் தெரு,சலவையாளர் தெரு, வெயிலுகந்தம்மன் கோயில் தெரு, ஜீவாநகர், பட்டர்குளம் தெரு வழியாக கல்யாணசுந்தரம் விநாயகர் கோயில் தெருவை அடைந்தது. இந்த ஊர்வலத்தில் சுமார் 150க்கு மேற்பட்ட ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் அணிவகுப்பு ஊர்வலத்தில் பங்கேற்றனர். வழிநெடுக ஊர்வலத்திற்கு பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் மலர் தூவி வரவேற்பு அளித்தனர்.
பின்னர் ஆர்எஸ்எஸ் பொதுக்கூட்டம் நடந்தது. நகர தலைவர் இன்ஜினியர் நாராயணன் தலைமை வகித்தார். ஆர்எஸ்எஸ் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் ஓய்வு பெற்ற ஐஜி மாசானமுத்து முன்னிலை வகித்தார். அகில பாரத ராஷ்ரிய சேவாபாரதி பொறுப்பாளர் பத்மகுமார் சிறப்புரையாற்றினார். முன்னதாக விழாமேடையில் தற்கால சூழலில் ஹிந்துத்துவா என்னும் புத்தகத்தை வெளியிடப்பட்டது.
ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தை முன்னிட்டு தூத்துக்குடி தலைமையிடத்து ஏடிஎஸ்பி ஆறுமுகம் தலைமையில் திருச்செந்தூர் டிஎஸ்பி வசந்தராஜ், ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி ராமகிருஷ்ணன் ஆகியோர் மேற்பார்வையில் 350 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டனர்.
- திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர் பெ.முகேஷ் செல் : 7339011001
No comments