500 கிலோ போதை பொருட்களை பறிமுதல்.
புதுச்சேரி அருகே தடை செய்யப்பட்ட கூல் லிப் உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த இருவரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து சுமார் 500 கிலோ போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி அடுத்த வானூர் பகுதியில் உள்ள பிரபல மளிகை கடை குடோனில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக, வானூர் சிறப்பு படை பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சம்பந்தப்பட்ட குடோனில் ஆய்வு செய்தனர். அப்போது சுமார் 500 கிலோ கூல் லிப்,பான் மசாலா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து போதை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், வானூர் பகுதியை சேர்ந்த அருள், ரமேஷ் ஆகியோரை கைது செய்து ஆரோவில் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
No comments