ஒசூர் அருகே இளைஞர் முகத்தை சிதைத்து கொடூரமாக வெட்டிக்கொலை, போலிசார் விசாரணை.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கொளதாசபுரம் என்னும் கிராமத்திற்கு அருகே ஒருவர் கொலை செய்து கிடப்பதாக பாகலூர் போலிசாருக்கு தகவல் வந்தநிலையில் நள்ளிரவு 12.30 மணியளவில் சம்பவ இடத்திற்கு சென்ற போலிசார் 30 வயது மதிக்கதக்க இளைஞர் முகத்தை கத்தியால் குத்தி அடையாளம் தெரியாத வகையில் சிதைத்து கொலை செய்யப்பட்டு கிடந்தது உறுதி செய்யப்பட்டது.
பின்னர் பாகலூர் போலிசார், அடையாளம் தெரியாத இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர் யார் என தெரியாத நிலையில், போலிசாரும் புகாரின்றி விசாரணை தொடங்கி உள்ளனர். இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
No comments