திருச்செந்தூர் அருகே ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் பெண் பலி. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள கானம் மேலத்தெருவை சேர்ந்தவர் பாக்கியராஜ். இவர் ஆட்டோ வைத்து தொழில் செய்து வருகிறார். நேற்று இரவு சுமார் 9 மணி அளவில் கானத்தில் இருந்து குரும்பூர் பஜாருக்கு கானம் கிழக்கு தெருவை சேர்ந்த சண்முகம் மனைவி ஜெய குருத்து(68) என்பவரையும் அவரது மகன் மணிகண்டன்(38) என்பவரையும் தனது ஆட்டோவில் அழைத்து வந்துள்ளார் பாக்கியராஜ். இவர்கள் வந்த ஆட்டோ குரும்பூர் அருகே உள்ள சோணகன்விளை பகுதியில் வந்து கொண்டிருந்தது.
அப்போது திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் நோக்கி கார் ஒன்று வந்தது. இந்த காரை திருச்செந்தூர் முத்தாரம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் சுதாகர் ஊட்டி வந்தார். இந்த காரும் ஆட்டோவும் எதிர்பாராத விதமாக சோணகன்விளை பகுதில் நேருக்கு நேர் மோதியது. இதில் ஆட்டோவில் வந்தவர்கள் படுகாயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் குரும்பூர் போலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு மருத்திவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின் மேல் சிகிச்சைக்காக அனைவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். செல்லும் வழியில் ஜெயகுருத்து இறந்தார். இந்த சம்பவம் குறித்து குறும்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இதற்கிடையில் இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
- திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர் பெ.முகேஷ்.
No comments