தமிழ்நாடு அரசு ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க கோரி ஊராட்சி செயலர்கள் அரசுக்கு தபால் அனுப்பும் போராட்டம்.
அதன் ஒரு பகுதியாக தமிழக அரசுக்கு 40 ஆயிரம் கடிதம் அனுப்பும் போராட்டம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி, தூத்துக்குடி தலைமை தபால் நிலையம் முன்பு அரசுக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட தலைவர் கற்குவேல் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கருப்பசாமி, மாவட்ட பொருளாளர் சங்கரலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர் வேல்முருகன் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்.
பின்னர், தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் ஊராட்சி செயலர்களை தமிழ்நாடு அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி 1500 கடிதங்கள் தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டன. இதில், மாநில பொதுக்குழு உறுப்பினர் கணேசன், மாநில செயற்குழு உறுப்பினர் இசக்கி முத்து, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பால்ராஜ், ஒன்றிய நிர்வாகிகள் இசக்கி முத்து, மாரிக்கனி, சண்முகராஜ், சுரேஷ், கார்த்திகேய வெங்கடேசன், சோமு, காசிராஜன் உள்ளிட் பலர் கலந்து கொண்டனர்.
No comments