Breaking News

பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம்.


தூத்துக்குடியில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட பாஜக சார்பில் 39வது வார்டு பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. பிரதமர் நரேந்திரமோடி பிறந்தநாள் விழாவையொட்டி தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக சார்பில் கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட 39வது வார்டு, வடக்கு ரத வீதி, மேற்கு ரத வீதி சந்திப்பில் பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. முகாமில் மண்டல தலைவர் ராஜேஷ் கனி முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம் தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார்.

இதில், மாவட்ட மகளிர் அணி துணைத்தலைவர் உஷா தேவி, மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்டத் தலைவர் தேவகுமார், மண்டல துணைத்தலைவர் லட்சுமி வேல்கனி, மண்டல பொதுச் செயலாளர்கள் வன்னிய ராஜன், சண்முகசுந்தரம், மாவட்ட துணைத் தலைவர்கள் தங்கம், பாலாஜி, விருந்தோம்பல் பிரிவு மாநில செயலாளர் பாலமுருகன், கிளை தலைவர் சங்கர், ஊடகப்பிரிவு மாவட்ட துணை தலைவர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

No comments

Copying is disabled on this page!