குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூபாய் 19 லட்சத்து 69 ஆயிரத்து 88 ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள உலகப்புகழ் பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் 18 நிரந்தர உண்டியல் உள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது.
இந்த கோவிலில் உள்ள இந்த 18 நிரந்தர உண்டியல்களும் மாதம் தோறும் எண்ணப்படும். இந்த நிலையில் கடந்த மாதத்திற்கான உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் பக்தர்கள் காணிக்கையாக ரூபாய் 19 லட்சத்து 69 ஆயிரத்து 88 ரூபாய் ரொக்கமாக வருவாய் வந்துள்ளது. மேலும் தங்கம் 80 கிராம் 800 மில்லி கிராமும், வெள்ளி 300 கிராம் 700 மில்லி கிராம் கிடைத்துள்ளது. மேலும் சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாட்டு கரன்சிகள் கிடைத்துள்ளது. இதில் கோவில் நிர்வாகத்தினர் கலந்து கொண்டனர்.
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர் பெ.முகேஷ்
No comments