தூத்துக்குடி காமராஜர் கல்லூரியில் நடைபெற்ற முதல்வர் கோப்பைக்கான செஸ் போட்டியை மாவட்ட கூடுதல் கலெக்டர் ஐஸ்வர்யா துவக்கி வைத்தார்.
இப்போட்டியில் 170 மாணவர்களும் 150 மாணவிகளும் கலந்து கொண்டனர். இதில், மாணவர்கள் பிரிவில் காமராஜ் கல்லூரி மாணவர்கள் செல்வமுருகன் முதல் இடமும், வேல்முருகன் இரண்டாம் இடமும் பெற்றனர். நேஷனல் பொறியியல் கல்லூரி மாணவர் கிருஷ்ணா மூன்றாம் இடம் பெற்றார்.
மாணவிகள் பிரிவில் நாசரேத் மார்காஷியஸ் கல்லூரி மாணவி புஷ்பா இவாஞ்சலின் முதல் இடம் பெற்றார். கிள்ளிகுளம் வ.உ.சி. வேளாண்மை கல்லூரி மாணவி ஜெயசூரியா இரண்டாம் இடம் பெற்றார். காமராஜ் கல்லூரியை சேர்ந்த மாணவி அனுஷா மூன்றாம் இடம் பெற்றார்.
இதில், முதலிடம் பிடித்த மாணவர் மற்றும் மாணவிக்கு தலா ரூ.3 ஆயிரமும், இரண்டாம் இடம் பிடித்த மாணவன் மற்றும் மாணவிக்கு தலா ரூ.2 ஆயிரமும், மூன்றாம் இடம் பிடித்த மாணவன் மற்றும் மாணவிக்கு தலா ரூ.ஆயிரம் பரிசு தொகை வழங்கப்பட்டது. முதல் மூன்று இடம் பிடித்த மாணவ, மாணவிகள், மாநில அளவிலான போட்டிகளுக்கு தூத்துக்குடி வருவாய் மாவட்டம் சார்பில் விளையாட தகுதி பெற்றனர். இந்தப் போட்டியின் தலைமை நடுவராக பேராசிரியர் கற்பகவல்லி பணியாற்றினார். போட்டியின் துவக்க விழாவில் நாகலாபுரம் அரசுக் கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் ஆல்ட்ரின் அதிசயராஜ், காமராஜ் கல்லூரி துணை முதல்வர் அசோக், ஸ்குவாஷ் பயிற்சியாளர் பிருந்தா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அதிகாரி அந்தோணி அதிர்ஷ்டராஜ் செய்திருந்தார்.
No comments