அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட கூட்டம் முடிந்த பிறகு வாழைத்தார்களை போட்டி போட்டுக் கொண்டு வெட்டி எடுத்துச் சென்ற திமுக தொண்டர்கள்.
மயிலாடுதுறை அருகே மணல்மேட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட கூட்டம் முடிந்த பிறகு வாழைத்தார்களை போட்டி போட்டுக் கொண்டு வெட்டி எடுத்துச் சென்ற திமுக தொண்டர்கள்.
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் திருவுருவ வெண்கல சிலையினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து பேசினார்.
இதில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன், அரசு கொறடா கோவி.செழியன், மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் நிவேதாமுருகன் எம்எல்ஏ, சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்கும் விதமாக சாலையில் இருபுறங்களிலும் வாழைத்தாருடன் மரங்கள் கட்டியும், வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கூட்டம் முடிந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்ற நிலையில் கூட்டத்திற்கு வந்த திமுக தொண்டர்கள் ஏராளமானோர் சாலையின் இருபுறமும் கட்டப்பட்டிருந்த வாழை மரங்களில் உள்ள வாழைதார்களை கத்தியால் வெட்டி வாழை குலைகளை தலையில் சுமந்து சென்றனர். சிலர் போட்டிப்போட்டிக் கொண்டு வாழைதார்களில் உள்ள வாழை காய்களை கைகளால் பிய்த்து எடுத்துச் சென்றனர். மேலும் பள்ளி முடிந்து சென்ற மாணவர்கள் வாழை தார்களை வெட்டி வீட்டிற்கு எடுத்துச் சென்றனர்.
No comments