வேளாண் மண்டல பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தி மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு பூம்புகார் முதல் தஞ்சாவூர் வரை முன்னெடுத்துள்ள பிரசாரத்தில் இன்று மூன்றாவது நாளாக குத்தாலத்தில் பொதுக்கூட்டம்.
வேளாண் மண்டல பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தி மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு பூம்புகார் முதல் தஞ்சாவூர் வரை முன்னெடுத்துள்ள பிரசாரத்தில் இன்று மூன்றாவது நாளாக குத்தாலத்தில் பொதுக்கூட்டம்.
காவிரி படுகை மாவட்டங்களில் வேளாண் மண்டல பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு பூம்புகார் முதல் தஞ்சாவூர் வரை விழிப்புணர்வு பொதுக் கூட்டங்களை நடத்தி வருகிறது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் நேற்று முன்தினம் தொடங்கிய பிரச்சாரத்தின் மூன்றாவது நாளான இன்று மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.
இந்த பொதுக்கூட்டத்துக்கு மீத்தே திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் தலைமை வகித்து காவிரி படுகை மாவட்டங்களில் வேளாண் மண்டல பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும், காவிரி படுகை மாவட்டங்களில் வேளாண் மண்டல பாதுகாப்புச் சட்ட வரம்புக்குள் கொண்டுவரப்படாத பகுதிகளையும் தமிழக அரசு உடனடியாக கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி பேசினார். இதில் ஒருமித்த கருத்துடைய அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments