Breaking News

காரைக்கால் மேடு அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி. மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு.


காரைக்கால் மாவட்டம் காரைக்கால்மேடு மீனவ கிராமத்தில் அமைந்துள்ள பக்கிரிசாமி பிள்ளை அரசு உயர்நிலைப் பள்ளியில்  அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. 

இக்கண்காட்சியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கழிவு மேலாண்மை, சந்திராயன் 3 படைத்த சாதனை, மனித உடல் மண்டலங்களின் செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு அறிவியல் சார்ந்த மாணவர்களின் படைப்புகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. 

குறிப்பாக மாணவர் ஒருவர் செய்திருந்த நுண்ணோக்கி காண்போரை கவரும் விதமாக இருந்தது. இக்கண்காட்சியை திருவேட்டக்குடி அரசு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கோ.ராஜு நடுவராக இருந்து மாணவர்களின் படைப்புகளை பார்வையிட்டார். 

பள்ளியின் தலைமை ஆசிரியர் கே.கண்மணி தலைமையில் நடைபெற்ற இக்கண்காட்சியை அறிவியல் ஆசிரியர்கள் சுந்தரமதி மற்றும் வினோத் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் பல்வேறு அறிவியல் படைப்புகளை காட்சிக்கு வைத்திருந்தனர். இதர மாணவர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த அறிவியல் படைப்புக்களை பார்வையிட்டு அதன் தொழில்நுட்பம் குறித்து கேட்டறிந்தனர்.

No comments

Copying is disabled on this page!