ஒசூர் அருகே 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞர் போக்சோவில் கைது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே 24வயதான சந்திரன் என்கிற வாலிபர், தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வரும்நிலையில், நேற்று மாலை உறவுக்கார மகளான 7வயது சிறுமிக்கு கடையில் தின்பண்டம் வாங்கி தருவதாக கூறி அழைத்து சென்றவர் நீண்டநேரமாக குழந்தை வராததால், அவரின் தாயார் தேடி சென்றபோது, சந்திரன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து வந்ததை கண்டு பேரதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார் கூச்சலிட்டதால் அப்பகுதியினர் சந்திரனிடமிருந்து குழந்தையை மீட்டு வாலிபருக்கு தர்மஅடி கொடுத்தனர்.
பின்னர் ஒசூர் அனைத்து மகளிர் போலிசார் வாலிபரை மீட்டு ஒசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து, போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
No comments