காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு 11.5 கோடி செலவில் புதிதாக வாங்கப்பட்ட எம் ஆர் ஐ ஸ்கேன் கருவியை அமைச்சர் பார்வையிட்டார்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் அதிநவீன சிகிச்சைக்கான கருவிகள் ஏதும் இல்லாததால் காரைக்கால் மக்கள் விபத்து உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தஞ்சாவூர் அல்லது புதுச்சேரியை நோக்கி செல்ல வேண்டிய சூழல் இருந்து வந்த நிலையில், இங்கு அதிநவீன ஸ்கேன் கருவிகளை நிறுவ பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அமெரிக்காவிலிருந்து ரூபாய் 11.5 கோடி செலவில் அதிநவீன எம்.ஆர்.ஐ ஸ்கேன் வாங்கப்பட்டது.
இதனை காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் நிறுவும் பணி நடைபெற்று வருகிறது இப்பணியை புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் பிஆர்.என்.திருமுருகன் நேரில் பார்வையிட்டு எம்.ஆர்.ஐ ஸ்கேன் இயந்திரம் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர் "புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கு இரண்டு எம்.ஆர்.ஐ ஸ்கேன் இயந்திரங்கள் 23 கோடி செலவில் வாங்கப்பட்டதாகவும், இதில் காரைக்காலுக்கு 11.5 கோடி எனவும், இந்த எம்.ஆர்.ஐ - ஸ்கேன் இயந்திரம் செயல்பாட்டுக்கு வர 40 நாட்கள் கால அவகாசம் தேவைபடும் எனவும் அவர் தெரிவித்தார்.
பின்னர் CT-ஸ்கேன், எக்ஸ்ரே மற்றும் மாமோகிராம் (புற்றுநோய் கண்டறியும் கருவி) இயந்திரங்கள் வாங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார். காரைக்கால் மக்களின் நிலையை உணர்ந்த புதுச்சேரி முதலமைச்சர் அதிநவீன மருத்துவ கருவிகளை காரைக்காலுக்கு கொண்டுவர உதவியதாகவும் அவருக்கு நன்றி தெரிவித்தார்.
No comments