மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்கள் குழந்தைகளுடன் வந்து பெற்றோர் கோரிக்கை
பள்ளி குழந்தைகளிடம் ஒற்றை மருத்துவ நூதன மறைமுக திணிப்பைக் கைவிட அரசை வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்கள் குழந்தைகளுடன் வந்து பெற்றோர் கோரிக்கை மனு அளித்தனர்:-
பக்க விளைவுகளை ஏற்படுத்தும் ஒற்றை மருத்துவ நூதன திணிப்பைக் கைவிட அரசை வலியுறுத்தி இயற்கை வழி வாழ்வியல் கூட்டமைப்பு சார்பில் விவசாயிகள் 20க்கு மேற்பட்டோர் தங்கள் குழந்தைகளுடன் இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் நலம் சுதாகர் தலைமையில் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை சுமந்த பள்ளி குழந்தைகளுடன் வந்த விவசாயிகள், நாட்டில் சித்தா, ஹோமியோபதி, ஆயுர்வேதம், யுனானி, நேச்சுரோபதி, அக்குபஞ்சர் மற்றும் மரபியல் வாழ்வியல் முறை என ஏராளமான மருத்துவ முறைகள் இருக்கின்ற போதும் மத்திய, மாநில அரசுகள் பள்ளி குழந்தைகளிடம் ஒற்றை மருத்துவ நூதன மறைமுகத் திணிப்பை உடனடியாக கைவிட வேண்டும். இவ்வாறு குழந்தைகளின் உடல் மற்றும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பக்க விளைவுகளுடன் கூடிய ஆங்கில ஒற்றை மருத்துவத்தை புகுத்துவது மக்களாட்சி முறைக்கும், இந்திய அரசியலமைப்பு சாசன கோட்பாடுகளுக்கும் எதிரானது என மனு அளித்தனர்.
No comments