தமிழக துணை முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த தொழிலதிபர்
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு தொழிலதிபர் ஸ்கைவின் மோகன் வாழ்த்து.
தமிழகத்தின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை கும்பகோணம் “ஸ்கைவின்” வணிக நிறுவனங்களின் தலைவர் எம்.மோகன் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து அவரது பணி சிறக்க வாழ்த்து தெரிவித்தார். அருகில் தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அமைச்சர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
No comments