மதுரையை சேர்ந்த சிக்கா அவரது மனைவி சுமி மற்றும் ரவுடி பேபி சூர்யா ஆகியோரை புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸார் விசாரணை.?
புதுச்சேரியில் சிறுமிக்கு ஆபாச வீடியோ அனுப்பிய பிரபல யூடியூபரின் மகனை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்த நிலையில், அச்சிறுமியின் குடும்பத்தை மிரட்டியதாக வந்த புகாரின் பேரில் மதுரையை சேர்ந்த சிக்கா அவரது மனைவி சுமி மற்றும் ரவுடி பேபி சூர்யா ஆகியோரை சைபர் கிரைம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரியை சேர்ந்த 11ஆம் வகுப்பு பயிலும் சிறுமிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, திடீரென ஆபாச வீடியோ அனுப்பி மிரட்டல் விடுத்த மதுரையை சேர்ந்த பிரபல யூடியூபர் சிக்கந்தின் ஷா-சுமி தம்பதியின் மகன் அஷ்ரப் அலியை சைபர் க்ரைம் போலிசார் சில தினங்களுக்கு முன்பு கைது செய்தனர்.
இதனிடையே சிறுமியின் குடும்பத்தை மிரட்டியதாக சிறுமியின் தாயார் அளித்த புகாரை தொடர்ந்து ரவுடிபேபி சூர்யா, அவரது சகோதரி சிமி- கணவர் சிக்கந்தின் ஷா ஆகியோரை சைபர் கிரைம் போலீஸார் இன்று அழைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments