முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டியில் அதிக பரிசு தொகை பெற்று ஏவிசி மாணவர்கள் சாதனை!
மயிலாடுதுறை ஏவிசி கல்லூரி மாணவர்கள் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் மாவட்ட அளவில் அதிக பரிசுத்தொகை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்திய மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் கல்லூரி மாணவ மாணவியருக்கு கடந்த 16ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை மயிலாடுதுறை இந்திய விளையாட்டு ஆணைய மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஏவிசி கல்லூரி மாணவர்கள் கபடி போட்டியில் முதலிடத்தையும், கூடைப்பந்து போட்டியில் முதல் மற்றும் இரண்டாம் இடத்தையும், கிரிக்கெட் போட்டியில் முதலிடத்தையும், வளைக்கோல் பந்து போட்டியில் முதலிடத்தையும், கைப்பந்து போட்டியில் முதல் இடத்தையும், சிறகுப்பந்து போட்டியில் முதலிடத்தையும், கையுந்து பந்து போட்டியில் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தையும், கால்பந்து போட்டியில் முதலாம் இடத்தையும், தடகளம்,சிலம்பம், குத்துச்சண்டை, நீச்சல், ஆகிய போட்டிகளிலும் பல்வேறு மாணவ மாணவியர்கள் வெற்றி பெற்று 6 லட்சத்திற்கு மேல் பரிசுத்தொகை பெற்ற மாவட்ட அளவிலான ஒரே கல்லூரி என்ற பெயரை பெற்றுத் தந்து கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசரும் ஏவிசி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அதிகாரியுமான கே.வெங்கடராமன் பாராட்டி கௌரவித்தார். உடன் முதல்வர் டாக்டர் ஆர்.நாகராஜன் தேர்வு நெறியாளர் டாக்டர் மேஜர்.ஜி.ரவி செல்வம், உடற்கல்வி இயக்குனர் ஜே. ராஜ்குமார் மற்றும் பேராசிரியர்கள் ஆசிரியர் இல்லாத பணியாளர்கள் இருந்தனர்.
No comments