பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறையை ஐந்து நாட்கள் என்பதை 10 நாட்களாக நீட்டித்து தர தமிழ்நாடு டாக்டர் ராதாகிருஷ்ணன் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை. தமிழ்நாடு டாக்டர் ராதாகிருஷ்ணன் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை.
தமிழ்நாட்டில் தற்போது பள்ளிக் கல்விக்கான காலாண்டு தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. பள்ளிக் கல்வி நாட்காட்டி 2024-25ன் படி, 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான காலாண்டுத் தேர்வுகள் செப்டம்பர் 20 முதல் செப்டம்பர் 28, 2024 வரை நடைபெற்று வருகிறது. தற்போது தேர்வுகள் நிறைவடையும் தருவாயில் இருப்பதால் தேர்வுக்கு பின் விடுமுறைக்கான தேதியினை பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
அதன்படி செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 2 வரை காலாண்டு விடுமுறை என அறிவித்துள்ளது. இந்த விடுமுறை மாணவர்களுக்கு போதுமானதாக இல்லை எனவும் விடுமுறையினை 10 நாட்கள் நீட்டிக்க வேண்டும் எனவும் மாணவர்கள், பெற்றோர்கள், சமூக அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளனர். பொன்னேரியை தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு டாக்டர் ராதாகிருஷ்ணன் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் அதன் மாநில தலைவர் மற்றும் ஜாக்டோ ஜியோ அமைப்பின் உயர்மட்ட குழு உறுப்பினர் டாக்டர் காத்தவராயன் இது குறித்து அளித்துள்ள வேண்டுகோளில் மாணவர்களுக்கு ஐந்து நாட்கள் விடுமுறை என்பது போதுமானதாக இல்லை எனவும் ஆசிரியர்களுக்கு தேர்வுதாளை திருத்துவதில் போதிய கால அவகாசம் இல்லை, எனவும் மாணவர்களின் தரத்தினை சரிபார்பதற்கு காலாண்டு தேர்வு மிக முக்கியமானது என்பதால் தேர்வுதாளை பொறுமையாக திருத்த வேண்டிய அவசியம் உள்ளது. எனவே விடுமுறையை 5 நாட்கள் என்பதற்கு பதிலாக 10 நாட்களாக நீட்டிக்க வேண்டும் என கேட்டுக் கொள்வதாக தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.
No comments