திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பொதுக்கூட்டம்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் ஒன்றியம் மேலூர் பஜாரில் மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் ஏற்பாட்டில் நடைபெற்ற அண்ணாவின் 116வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளரும் பொன்னேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி. பலராமன் தலைமையில் தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வேணுகோபால் பேசுகையில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை கொண்டாட கூடிய ஒரே கட்சி தமிழகத்தில் உள்ளது என்றால் அது அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் எனவும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஒரே கையெழுத்து நீட்டை ஒழிப்போம் என உதயநிதி தெரிவித்தார். ஆனால் 50000 கையெழுத்து வாங்கி கூட நீட்டை ஒழிக்க முடியவில்லை என குற்றம் சாட்டிய அவர் பொய் வாக்குகளை கொண்டு ஆட்சிக்கு வந்த திமுக இனி வெற்றி பெற முடியாது என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பொன் ராஜா, சக்கரபாணி, ஒன்றிய கவுன்சிலர் பானு பிரசாத், மாவட்ட மாணவரணி செயலாளர் ராகேஷ், ஒன்றிய கவுன்சிலர் சுமித்ரா குமார், பொன்னேரி நகர செயலாளர் செல்வகுமார், மீஞ்சூர் பேரூர் செயலாளர் பட்டாபிராமன், அமிர்தலிங்கம், மீஞ்சூர் மாரி, மீஞ்சூர் எம்.வி.எஸ். தமிழரசன், ராஜன், அத்திப்பட்டு தர்ம பிரகாஷ், பட்ட மந்திரி முன்னாள் வார்டு உறுப்பினர் வேலு, அத்திப்பட்டு புது நகர் பிரபாகரன், சுபா ரெட்டிபாளையம் கருணாகரன் பி. ரமேஷ் , மேலூர் திராவிட செல்வன், முல்லைவாயல் சரவணன், உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் 100 பேருக்கு தையல் இயந்திரம் இஸ்திரி பெட்டி உள்ளிட்ட நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.. நிகழ்ச்சி முடிவில் மேலூர் சிவலிங்கம் நன்றி தெரிவித்தார். பொதுக் கூட்டத்திற்கு வருகை தந்த மாவட்டச் செயலாளருக்கும் மற்றும் சிறப்பு அழைப்பாளருக்கும் வல்லூர் ஊராட்சி பட்டா மந்திரி முன்னாள் வார்டு உறுப்பினர் வேலு மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தார்.
No comments