Breaking News

வனச்சரக காப்பு காட்டில் ஓட்டல் கழிவுநீர் கொட்டிய நபருக்கு அபராதம்.

 

மொரப்பூர் வனச்சரக அலுவலர் ஆனந்தகுமாருக்கு கழிவுநீரை டிராக்டரில் எடுத்து வந்து மொரப்பூர் பிரிவு அரூர் காப்பு காட்டில் கொட்டுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் வனவர் விவேகானந்தன், வனக்காப்பாளர் கவுரப்பன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது அரூர் அருகே உள்ள கொங்கவேம்பு கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் 45 என்பவர் டிராக்டரில் ஓட்டல் கழிவு நீரை காப்புக்காட்டில் கொட்டிக் கொண்டிருந்தபோது அவரை வன பாதுகாவலர் மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். இதையடுத்து, மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம், உத்தரவின் பேரில் கழிவு நீர் கொட்டிய சிவகுமாருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

No comments

Copying is disabled on this page!