ஆட்சித்தலைவர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டாமாறுதல், கோரி 83 மனுக்களும், வேலைவாய்ப்பு கோரி 58 மனுக்களும், முதியோர், மாற்றுத்திறனாளிகள், மற்றும் விதவை உதவித்தொகை கோரி 49 மனுக்களும், புகார் தொடர்பான மனுக்கள் 51 மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி உதவிதொகை, வங்கிகடன், மாற்றுத்திறனாளி உபகரணங்கள் கோரி 43 மனுக்களும், அடிப்படை வசதி கோரி 53 மனுக்களும், நிலஅபகரிப்பு தொடர்பாக 64 மனுக்களும் கலைஞர் உரிமைத்தொகை வேண்டி 11 மனுக்களும் தொழிற்கடன் வழங்க கோரி 54 மனுக்களும் கலைஞர் கனவு இல்லம் வேண்டி 18 மனுக்களும் மொத்தம் 484 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் சம்மந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விபரத்தை மனுதாரர்களுக்கு தெரிவிக்கவேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மகாபாரதி தெரிவித்தார்.
தொடர்ந்து, சிப்பம் கட்டும் அறை, காய்கறி விதைகள், செண்டுமல்லி விதைகள், மாடித்தோட்டம் தொகுப்பு, தென்னங்கன்றுகள், மாங்கன்றுகள், நடமாடும் காய்கறி வண்டி,மா அறுவடைக் கருவி என ரூ.2 லட்சத்து 81 ஆயிரத்து 20 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 10 பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சி தலைவர் வழங்கினார்.
பின்னர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் பார்வை குறைபாடுடைய பள்ளி மாணவருக்கு ரூ.10000 மதிப்புள்ள நுண்பார்வை நவீன கருவியினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
இக்கூட்டத்தில், தனித்துணை ஆட்சியர் கீதா, மாவட்ட பிற்படுத்தபட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ரவி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சுரேஷ் மற்றும் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் பானுகோபன் மற்றும் அனைத்துதுறை அலுவலர்களும் கலந்துகொண்டனர்.
No comments