சின்னமனூர் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவப் பணியாளர்களை நியமனம் செய்திட வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்.
சின்னமனூர் அரசு மருத்துவமனை அருகில், ஒன்றிய செயலாளர் தோழர் வே.ஜெய்ஹிந்த் அவர்களின் தலைமையில், ஒன்றிய தலைவர் தோழர் ம.விக்னேஸ்வரன், ஒன்றிய தலைவர் ஒன்றிய பொருளாளர் தோழர் மு.நித்தியானந்தம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் இரா.தமிழ்பெருமாள், மாநிலக்குழு உறுப்பினர் ஆ.கௌரி ஆகியோர் கோரிக்கை உரை நிகழ்த்தினார்கள். பி.ஆரோக்கியராஜா மாவட்டக்குழு உறுப்பினர், செ.கார்த்திக்ராஜா ஒன்றிய துணைச்செயலாளர், பிரேம்குமார் ஒன்றிய துணைத்தலைவர் மற்றும் S.சதீஸ்குமார், மு.வேல்முருகன், ம.விக்கினேஸ்வரன், சந்துரு, ஹரி, ஹரிஸ்குமார், சுகதேவ், மணிவேல் தருண், லோகநாத், தினேஷ்குமார், ஆகாஸ் அழகுராஜ், மணி, சந்தோஷ், சூரியா, தருண், கார்த்திக், மணி, சாரதி, வல்லரசு, ஸ்ரீராமா, விக்கி, கௌதம் உள்ளிட்ட தோழர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
- சின்னமனூர் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி தலைக்காய அறுவை சிகிச்கை பிரிவை ஏற்படுத்திடு!
- சின்னமனூரைச் சுற்றியுள்ள 58 கிராம மக்கள் பயன்பெறும் வகையில் கூடுதல் மருத்துவ பிரிவுகனையும், கூடுதல் கட்டிடங்களையும் ஏற்படுத்தி நடவடிக்கை எடுத்திடு!
- உள் / வெளி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களின் பற்றாகுறையை போக்கிட போதிய மருத்துவர்களை நியமனம் செய்திடு!
- மருத்துவர்களுக்கும், நோயாளிகளுக்கும் உதவியான இருக்க போதிய செவிலியர்களை நியமனம் செய்திடு!
- சுகாதாரமான மருத்துவ வளாகத்தை உருவாக்கிட அல்லது பாதுகாத்திட போதிய தூய்மை பணியாளர்களை நியமனம் செய்திடு!
- தங்கு தடையின்றி மின்சாரம் கிடைத்திட நவீனரக ஜெனரேட்டரை நிறுவிடு!
- மருத்துவமனை வளாகத்தை திருடர்களிடமிருந்து பாதுகாத்திட கூடுதல் சிசிடிவி கேமராக்களை நிறுவிடு!
- மருத்துவமனையில் இரவு மற்றும் பகல் நேர பாதுகாவலர்களை நியமனம் செய்திடு!
- இருண்ட நிலையில் இருக்கும் மருத்துவமனையை வெளிச்சத்திற்கு கொண்டுவர போதிய மின்விளக்குகளை அமைத்திடு!
- அவசர காலங்களில் பயன்படுத்தப்படும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை கூடுதலாக மருத்துவமனையில் நிறுத்திடு!
- விபத்து, தற்கொலை, பேரிடர் காலங்களில் ஏற்படும் மரணங்களை பிரேத பரிசோதனை செய்திட உரிய பணியாளர்களை நியமனம் செய்திடு!
No comments