உளுந்தூர்பேட்டை அருகே புதிய காரை குலதெய்வ கோவிலுக்கு எடுத்த சென்றபோது விபத்து; ஒருவர் உயிரிழப்பு.
கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் வயது23 இவர் புதிதாக வாங்கப்பட்ட காரை குலதெய்வத்துக்கு படைப்பதற்கு தனது குடும்பத்துடன் கடலூர் மாவட்டம் மாளிகைமேடு பகுதியில் உள்ள குலதெய்வம் கோயிலுக்கு சென்றுள்ளார் இந்த காரை தமிழ்ச்செல்வன் ஒட்டி வந்த நிலையில் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள காட்டுநெம்பிலி கிராமத்தில் வந்த போது உளுந்தூர்பேட்டையில் இருந்து விருதாச்சலம் நோக்கிச் சென்ற ஈச்சர் லாரி மீது மோதி கோர விபத்துக்குள்ளானது இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியதில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தில் ஒருவர் உயிர் இழந்த நிலையில் குழந்தை உள்பட நான்கு பேர் படுகாயம் அடைந்துள்ளனர்
மேலும் ஈச்சர் லாரி பயணம் செய்த கூலி தொழிலாளிகள் ஐந்து பேர் படுகாயம் ஏற்பட்ட நிலையில் விபத்துக்குள்ளான இரண்டு வாகனங்களில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் இதில் கார் அப்பளம் போல் நொறுங்கி இடுப்பாடில் சிக்கிக் கொண்டவர்களை பொதுமக்கள் உதவியுடன் தீயணைப்புத் துறையினர் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தின் காரணமாகசுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது சம்பவம் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை போலீசார் போக்குவரத்தை சரி செய்து விபத்தில் சிக்கிக்கொண்ட வாகனங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர் தொடர்ந்து விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் வாங்கப்பட்ட புதிய காரை படைப்பதற்காக குலதெய்வம் கோவிலுக்கு சென்றபோது நடந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்த நிலையில் 5 பேர் படுகாயம் ஏற்பட்ட சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தை ஏற்படுத்தியது.
No comments