மயிலம் ஒன்றியம் அகூர் அரசு உயர் நிலை பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள்களை ஒன்றிய குழு பெருந்தலைவர் வழங்கினார்.
விழுப்புரம் மாவட்டம் மயிலம் ஒன்றியம் அகூர் அரசு உயர்நிலை பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயிலும் 78 மாணவ, மாணவியர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை ஒன்றிய குழு பெருந்தலைவர் யோகேஸ்வரி மணிமாறன் தலைமை தாங்கி வழங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் ராமமூர்த்தி அனைவரையும் வரவேற்றார். இதில் மாவட்ட பொறுப்பாளர் டாக்டர்.சேகர், முன்னாள் எம்.எல்.ஏக்கள் சேதுநாதன், டாக்டர் மாசிலாமணி, மயிலம் ஒன்றிய செயலாளர் மணிமாறன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் இதில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஹேமலதா பாரதிதாசன், மாவட்ட கவுன்சிலர் விஜயன் ஒன்றிய கவுன்சிலர்கள் பரிதா சம்சுதீன், தனலட்சுமி ஆறுமுகம், திமுக நிர்வாகிகள் சண்முகம், கந்தவேலு, ராமகிருஷ்ணன், நாராயணமூர்த்தி, முனியாண்டி,சேகர்அன்புசேகர், பிரபு, மதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் நெடிமோழினூர் பள்ளியில் பயிலும் 57 மாணவ, மாணவியர்களுக்கு சைக்கிள்களை மயிலம் ஒன்றிய குழு பெருந்தலைவர் யோகேஸ்வரி மணிமாறன் வழங்கினார்.
No comments